சென்னையில் ஆயிரத்து 101 கோடி ரூபாய் உலக வங்கி நிதியுதவியுடன் கட்டப்படும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் குறித்த அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த திட்டத்தை செயல்படுத்தும் போது மழை நீர் பூமியில் இறங்குவதற்கு ஏதுவாக, மழைநீர் வடிகால்களின் அடிப்பகுதியில் காங்கிரீட் போட வேண்டாம் என உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.