புதுக்கோட்டை மாவட்டம் வடுகாட்டில் நண்பரின் தந்தைக்காக வாக்கு சேகரிக்க சென்றபோது கார் மரத்தில் மோதியதில் பாலாஜி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆமாஞ்சி பஞ்சாயத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் ரவிசந்திரன் என்பவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாகனத்திற்குள் சிக்கியிருந்த பிரவீன் என்பவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.