புதுக்கோட்டை மாவட்டம் புல்வயல் கிராமத்தில் புதிய தமிழகம் கட்சி கொடிக்கு கீழே அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் இமானுவேல் சேகரன் படத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இமானுவேல் சேகரன் படத்துக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்டித்து, அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார், அவர்களை சமாதானம் செய்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.