தமிழ்நாடு

13 வயது சிறுமி கொல்லப்பட்ட விவகாரம் - கொலை வழக்கில் குற்றவாளிகளை நெருங்க முடியாத போலீஸ்

புதுக்கோட்டை அருகே 13 வயது சிறுமி கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே 13 வயதான சிறுமி கடந்த 18ஆம் தேதி குளக்கரையில் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவி சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் உயிரிழந்தார். பாலியல் வன்கொடுமை முயற்சியில் சிறுமி கொல்லப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது. இதனிடையே இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரணை நடத்திய போதும், எந்த வித முன்னேற்றமும் இல்லை என கூறப்படுகிறது. கொலை நடந்து 4 நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Neyveli | Protest | NLC-க்கு வந்த அரசு அலுவலர்கள்.. சாலையில் தடுத்து நிறுத்திய மக்கள்

CM Vijay | Chennai | "என் விஜய் அண்ணனிடம் யாராச்சும் சொல்லுங்கப்பா.."

TN Education Department | ``10 AM'' - பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு

Vijay vs Udhayanidhi Stalin | ``சட்டம்-ஒழுங்கு’’ - கொந்தளித்த உதயநிதி

Kovai | "குற்றவாளிகளுக்கு உட்சபட்ச தண்டனை... அதுவே எங்க கடமை" கோவை சிறுமி வழக்கில் அமைச்சர் உறுதி