Pudukkottai | District Collector | நைட்ன்னு கூட பாக்கலையே.. கலெக்டர்ன்னா இப்படி தான் இருக்கணும்..
#pudukkottai #districtcollector #thanthitv
அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் இரவில் ஆட்சியர் ஆய்வு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் இரவில் புதுக்கோட்டை ஆட்சியர் அருணா திடீர் ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், "உங்களைத்தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அருணா பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக, இரவு நேரத்தில் அறந்தாங்கி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு திடீரென சென்ற ஆட்சியர் அருணா, மருத்துவமனையின் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். மேலும், மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் வைத்திருக்கும் பாதுகாப்புப் பெட்டகத்தையும் அவர் பார்வையிட்டார். ஆய்வின்போது மருத்துவமனை தலைமை மருத்துவர் ரியாஸ் பாத்திமா, கோட்டாட்சியர் அபிநயா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் இத்ரீஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.