தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளராக மீண்டும் மீனாட்சிசுந்தரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின்போது ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யாவிட்டால் டிசம்பர் நான்காம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.