தமிழ்நாடு

ஆபாச படம் பதிவேற்றம் : "திருச்சியை சேர்ந்தவர்கள் பங்களிப்பு அதிகம்"

இணைய தளத்தில் ஆபாச படங்களை பதிவேற்றுபவர்கள் குறித்து, அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

''சிறார் ஆபாசப் படங்களை பார்ப்பவர்கள் பட்டியலில், சென்னை நகரம் முதலிடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியான நிலையில், மற்றொரு அதிர்ச்சியாக, அவ்வாறான படங்களை பதிவேற்றுபவர்கள் பட்டியலில் திருச்சியை சேர்ந்தவர்களின் பங்களிப்பு அதிகம் என தெரியவந்துள்ளது. சிறார் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றும் கும்பல் தனித்தனி குழுவாக, 3 ஐ.பி. முகவரிகள் கொண்டு இயங்குவதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர்களை அடையாளம் காணும் பணியில் சைபர் க்ரைம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப்படி, ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றுபவர்கள் பட்டியலில், சுமார் 60 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அந்த ஐ.பி. முகவரிகளை வைத்து சைபர் க்ரைம் போலீசார், தற்போது விசாரணையை துவக்கி உள்ளனர். இதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் கண்டுபிடிக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, "ஆபாச படங்களை இணையத் தளத்தில் பார்த்தவர்கள் மற்றும் பதிவேற்றியவர்கள் பட்டியல் கிடைத்தவுடன், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்று, திருச்சி மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு