தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விழாக் காலங்களில் சென்னையில் உள்ள மக்கள், தங்களின் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் படையெடுப்பது வழக்கம். இதற்காக, பகுதி வாரியாக பிரித்து சென்னையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். நெரிசல் உள்ளிட்ட சிக்கல்களை தவிர்க்க கூடுதல் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, கடந்த 10ம் தேதி முதல் 12ம் தேதி இரவு 8 மணி வரையிலும் 7 ஆயிரத்து 809 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. அதன் மூலமாக 3 லட்சத்து 81 ஆயிரத்து 795 பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர். இதுபோல, 13, 14ஆம் தேதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.