தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் படகு : கடத்தலுக்கு பயன்படுத்திய படகா ?

ராமேஸ்வரம் அடுத்துள்ள சேரன் கோட்டை கடற்கரைப் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பிளாஸ்டிக் படகு ஒன்று, நள்ளிரவில் கரை ஒதுங்கியது.

தந்தி டிவி
ராமேஸ்வரம் அடுத்துள்ள சேரன் கோட்டை கடற்கரைப் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பிளாஸ்டிக் படகு ஒன்று, நள்ளிரவில் கரை ஒதுங்கியது. இதுபற்றி மீனவர்கள் அளித்த தகவலின் பேரில், மத்திய மாநில உளவு பிரிவு போலீசார், அங்கு விரைந்து சென்றனர். அந்த படகில் இருந்த மீன்பிடி வலை, மண்ணெண்ணை கேன் மற்றும் சுசுகி இஞ்சினை கைப்பற்றிய போலீசார், இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த அந்த படகில் கடத்தல் நபர்கள் வந்தனரா அல்லது காற்றின் காரணமாக படகு கரை ஒதுங்கி இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கரை ஒதுங்கியுள்ள படகு, இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த மீனவர்களுடையது என இலங்கை வடமாகாண கடல்தொழில் இணையத்தின் தலைவர் ஆலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி