பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ராமேஸ்வரம் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பியே தங்களது வாழ்வாதாரம் இருப்பதாகவும், கொரோனா அச்சம் காரணமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள சூழலில், பெட்ரோல், டீசல் விலை உயர்வும் தங்களுக்கு கூடுதல் சுமையாக இருப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.