தமிழ்நாடு

Periyar Library Issue| தமிழகத்தில் பூதாகரமான வழக்கு.. உத்தரவு பிறப்பிக்கும் கோர்ட்

தமிழகத்தில் பூதாகரமான வழக்கு.. உத்தரவு பிறப்பிக்கும் கோர்ட்

thanthitv

#agalvilakkuissue #periyarlibraryissue அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீது வரும் 28ம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறபிப்பிக்க உள்ளது. கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஊழியர் அல்லாத தன்னை ஊழல் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது சட்டவிரோதம் என மோகன் தரப்பில் வாதிடப்பட்டது. விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும், இரண்டு நாட்கள் மட்டும் காவல் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், அரசு அலுவலர்களுடனான தொடர்பு மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்க காவல் அவசியம் என லஞ்ச ஒழிப்புத்துறை வாதிட்டது இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, காவல் கோரும் மனு மீது வரும் 28-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்தார். அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு மோகனை மீண்டும் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

Maternity Leave | இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை.. எத்தனை நாள் தெரியுமா? அறிவித்தார் CM விஜய்

Police | கள்ளக்குறிச்சி விவகாரம்.. நீதிபதியை சந்தித்த SP சிருஷ்டி சிங் - என்ன நடக்கிறது?

தீபம் ஏற்றும் போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மரணம் - எப்படி யாருக்கும் தெரியாம போச்சு

Cmvijay | Srilanka | இலங்கை தமிழர்களுக்கு தலைமை செயலகத்திலிருந்தே surprise கொடுத்த CM விஜய்

Rain Alert லிஸ்டில் சென்னை.. அடித்து நொறுக்க காத்திருக்கும் மழை