#periyar #periyarstatue
கண்டியூர் கோவில் முன்புள்ள பெரியார் சிலையை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு தஞ்சை திருவையாறு கண்டியூர் பிரம்மசிர கண்டீஸ்வரர் கோவில் முன்புள்ள, பெரியாரின் சிலையை அகற்றக் கோரிய வழக்கில், 4 வாரங்களுக்குள் சிலையைப் பாதுகாப்பாக அகற்ற உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. கோவிலின் முன்பாக உரிய அனுமதியின்றி 1990-ஆம் ஆண்டு சிலை நிறுவப்பட்டதாக மதுரையை சேர்ந்த தனிநபர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.... இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, 4 வாரங்களுக்குள் சிலையைப் பாதுகாப்பாக அகற்றி வேறு பாதுகாப்பான இடத்தில் வைக்க தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.