தமிழ்நாடு

"அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்" - வாக்காளருக்கு பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக வேண்டுகோள்

அனைத்து மக்கள் நலத் திட்டங்கள் தங்கு தடையின்றி கிடைத்திட, நான்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியும் வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

தந்தி டிவி
அனைத்து மக்கள் நலத் திட்டங்கள் தங்கு தடையின்றி கிடைத்திட, நான்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்த ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருவதாகவும், அதுதொடர வாக்களிக்க வேண்டும் என்றும் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும், அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள் என்றும் வாக்காளர்களுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

BREAKING || காலை, மாலை என எகிறும் விலை - நேரம் காலம் இல்லாமல் ஷாக் கொடுக்கும் தங்கம்

Seeman | Naam Tamilar | தமிழகமே உற்றுநோக்கும் தொகுதி.. இடைத்தேர்தலில் களமிறங்கும் சீமான்..?

TNRERA | Tamilnadu | "3 மாதங்கள் தான்.." பறந்த அதிரடி உத்தரவு

🔴LIVE : NTK | Seeman | இடைத்தேர்தலில் சீமான் போட்டி? - இந்த தொகுதியா?

BREAKING || CM விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வெற்றியை எதிர்த்து வழக்கு - பரபரக்கும் ஐகோர்ட்