தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கள் - "தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும்"

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிமுக அரசு சட்டம் நிறைவேற்றியது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,விளையாட்டை முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதிக்க முடியாது என கூறி, தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்தது.

இருந்தபோதிலும், உரிய விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டம் கொண்டு வர தடையில்லை எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இதனிடையே, உரிய விதிமுறைகள், தகுந்த காரணங்களை குறிப்பிட்டு, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்ய புதிய சட்டம் இயற்ற வேண்டும் என, முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார்.அவரது ஆணைக்கிணங்க, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுக்களை தடை செய்யும் சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என, அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்

🔴LIVE : Annamalai | "We The Leaders.." - அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Chennai | சென்னையில் விமான சேவை குறைப்பு.. அவதியில் பயணிகள்

Chennai | சென்னை ஏர்போர்ட்டில் கேட்பாரற்று கிடந்த பார்சல்.. திறந்து பார்த்தும் அதிர்ச்சி

Today Gold Price | சரிந்தது தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம்

Nellai NEET Exam | நெல்லைக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய நீட் வினாத்தாள்