#Omalur #RoadDamage #Salem #ThanthiTV Omalur Road Damage | சாலை விபத்து குறித்த தந்தி டிவி செய்தி எதிரொலி - ``இன்றே தொடங்கும்..’’ - நெடுஞ்சாலை ஆணையம் உடனடி ரியாக்ஷன் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சர்வீஸ் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியதால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேம்பாலம் மற்றும் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளால் சேதமடைந்த சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரச் சாலையால், இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்த தொடர் செய்திகளைத் தந்தி டிவி வெளியிட்டு வந்த நிலையில், அதன் எதிரொலியாக நெடுஞ்சாலை ஆணையத் திட்ட இயக்குநர் ஸ்ரீனிவாசலு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உடனடியாகத் தற்காலிகப் பணிகள் செய்யப்படும் என அவர் அறிவித்தபோது, அங்கே திரண்டிருந்த விசிக, பாமக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, இன்றே உடனடியாகப் பணிகள் தொடங்கும் என உறுதியளிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இந்நிலையில், தங்களது நீண்டகாலப் பிரச்சினைக்குக் குரல் கொடுத்த தந்தி டிவிக்கு அப்பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.