வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர்
ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 155 இடங்கள், அதிகம் பாதிப்பு நிகழும் என அடையாளம் கண்டுள்ளதாக கூறினார். மீட்பு குழுக்கள், தயார் நிலையில் உள்ளதாக கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.