தமிழ்நாடு

Nilgiri | திடீரென மொத்தமாக மாறிய ரூட்.. தீவிர கண்காணிப்பில் போலீஸ்

Nilgiri | திடீரென மொத்தமாக மாறிய ரூட்.. தீவிர கண்காணிப்பில் போலீஸ்

thanthitv

நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதையில் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா வாகனங்களுக்கு இன்று முதல் முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. விபத்துகளைத் தவிர்க்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா வாகனங்களுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இ-பாஸ் முறையை அமல்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மசினகுடியிலிருந்து உதகைக்கு கல்லட்டி வழியாக வர இனி அனுமதி கிடையாது என்பதால், கேரளா மற்றும் கர்நாடகாவிலிருந்து வரும் வாகனங்கள் தெப்பக்காடு வழியாக கூடலூர் சாலைக்கு திருப்பி விடப்படுகின்றன. சீகூர் பாலம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Election Result | மே 4 ரிசல்ட்.. பரபரப்பாக ஒரே இடத்தில் கூடிய அதிகாரிகள்

#BREAKING || இதை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் - பறந்த எச்சரிக்கை

TN Results 2026| மே 4ம் தேதி ரிசல்ட்டுக்கு முன்பே IAS அதிகாரிகள் வருகை

NHAI | மதியம் 12 முதல் 4 மணி வரை திடீர் தடை

🔴LIVE : Jana nayagan | Vijay | வாக்கு எண்ணும் மையத்தில் ஜனநாயகன் கைதானவர் ஜாமீனில் விடுதலை