தமிழ்நாடு

Nilgiris | ADMK | குன்னூர் அதிமுக வேட்பாளர் சாந்தி ராமு தீவிர வாக்கு சேகரிப்பு

thanthitv

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மலை கிராமங்களில் குன்னூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சாந்தி ராமு 2வது நாளாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக அதிமுக வேட்பாளர் சாந்தி ராமுவிற்கு கிராம மக்கள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்... பின்னர் பொதுமக்களிடையே பேசிய அவர், அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய், அரிசி அட்டைதாரர்களுக்கு இலவச பிரிட்ஜ், மற்றும் குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் ஆகிய திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்தார். மேலும், பெண்களுக்கு ஸ்கூட்டி வாங்க 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும், தான் வெற்றி பெற்றால் கிராமங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் முன்னின்று செய்து தருவேன் எனவும் அதிமுக வேட்பாளர் சாந்தி ராமு உறுதியளித்தார். இந்தப் பிரச்சாரத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

TVK Vijay | மெதுவாக நகர்ந்த விஜய் வாகனம்.. சட்டென்று ஸ்தம்பித்த நெல்லை

நின்ற ஈரான் போர்.. உலகம் முன் இந்தியா காட்டிய முதல் ரியாக்‌ஷன்

TVK Vijay | "உண்மையான காங்கிரஸ் யார் பக்கம்?" - ஒரே போடாக போட்ட விஜய்

TN Election 2026 | பரபரப்பாக தொடங்கிய தேர்தல் வேலை.. நேரடியாக இறங்கிய தேர்தல் ஆணையர்

Thiruparankundram | ``நீதிபதி GR.சுவாமிநாதன் விசாரிக்க தடை’’ - தி.குன்றம் வழக்கில் அதிரடி உத்தரவு