தமிழ்நாடு

புது பாஸ்போர்ட் கேட்டு துரைமுருகன் விண்ணப்பம்

திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு 4 வாரங்களுக்குள் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி
திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு 4 வாரங்களுக்குள் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்ச ரூபாய் சொத்து சேர்த்த வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி, அவருக்கு பாஸ்போர்ட் வழங்க, பாஸ்போர்ட் அலுவலகம் மறுத்தது. இதை எதிர்த்து, துரை முருகன் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், 2017ம் ஆண்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் தற்போது உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு மட்டுமே உள்தாகவும் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா, மீண்டும் பாஸ்போர்ட் கேட்டு துரைமுருகன் விண்ணப்பித்தால் 4 வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு உத்தரவிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்