தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி உள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டம் குற்றாலம் பகுதியிலும் மிதமான சாரலுடன், இதமான சூழல் நிலவி வருகிறது. முக்கிய அருவிகளில் காலை அதிக நீர்வரத்து காணப்பட்ட நிலையில் நண்பகல் வாக்கில் நீர்வரத்து மிதமாக இருந்தது. இதனால், சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க விதித்த தடையை போலீசார் விலக்கிக் கொண்டனர். மிதமான நீர் வரத்தால் சுற்றுலா பயணிகள் பயமின்றி அருவியில் குளித்து மகிழ்ந்தனர். வெயிலும், மிதமான சாரல் மழையும், இதமான சூழலும் குற்றாலத்தில் நிலவுவதால், சீசனை நன்றாக அனுபவித்து வருவதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.