தைத் திருநாளை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு, பல்லாயிரக்கணக்கானோர் பாத யாத்திரை செல்கின்றனர். நெல்லை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், அம்பை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். மேலும் பக்தர்கள் பலர், காவடி சுமந்து கொண்டும், அலகு குத்திக் கொண்டும் தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.