தமிழ்நாடு

தேசிய நெடுஞ்சாலையில் பைக் ரேஸ் அட்டகாசம்.. கல்லூரி பெண்கள் முன்பு ஸ்டன்ட் செய்து அட்டூழியம்

தந்தி டிவி

மதுரையில் தேசிய நெடுஞ்சாலையில் பைக் ரேசில் ஈடுபட்டு, வீடியோவை இன்ஸ்டாகிராமில் இளைஞர்கள் பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபட்டுள்ளனர், மேலும் அதனை இளைஞர் ஒருவர் நடு சாலையில் அமர்ந்தவாறு வீடியோ எடுப்பதும், அவர் அருகே அதிவேகமாக பைக்கில் பாய்ந்து செல்வதும் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல மதுரையில் உள்ள பெண்கள் கல்லூரி முன்பாக இளைஞர் ஒருவர் வீலிங் செய்து அதனை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் லைக்குகள் அதிகம் வாங்குவதற்காக, உயிரை பணயம் வைத்து ஸ்டன்ட் செய்து பதிவிட்டு வருகின்றனர். இதுபோன்று, சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் பைக் ரேசிங், ஸ்டன்ட் வீடியோக்களை காவல்துறையினர் தாமாக முன்வந்து ஆய்வு செய்து, அந்த இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்