மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, உறுதிபட தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் மற்றும் புதுவையில் மாணவர்களின் மருத்துவ கனவை, பிரதமர் மோடி தகர்ந்தெறிந்து விட்டதாக குற்றம்சாட்டினார்.