தமிழ்நாடு

முட்டை விலை திடீர் உயர்வு

தந்தி டிவி

முட்டை விலை திடீர் உயர்வு

நாமக்கல்லில் முட்டை விலை திடீரென உயர்ந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுளில் இருந்து, 10 காசுகள் உயர்த்தி 5 ரூபாய் 25 காசுகளாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 3 நாட்களில் 20 காசுகள் வரை மூட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் முடிவடைந்ததாலும், தீபாவளி பண்டிகைக் காலம் தொடங்கியதாலும் பிற மண்டலங்களில் முட்டை விலை உயர்ந்துள்ளதால், நாமக்கல் மண்டலத்திலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இனி வரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Madhya Pradesh | Train | ரயிலில் `தீ' என பரவிய வதந்தியால் ஓடிய பயணிகள் - மற்றொரு ரயில் மோதி பலர் பலி

Neet Exam | நீட் மறுதேர்வு ஹால் டிக்கெட்.. வெளியானது முக்கிய அறிவிப்பு

Ragava Lawrence | ``நாயோடு ஒப்பிட்டேனா?’’ - ராகவா லாரன்ஸ் திடீர் விளக்கம்

ADMK | TVK | "EPS தான் குதிரை பேரத்தில் ஈடுபட்டார்" - மரகதம் குமரவேல் அதிரடி

Cricket | TNPL கிரிக்கெட் தொடர் - வெளியான லிஸ்ட்