தமிழ்நாடு

Namakkal | Cauvery River | இரவு நேரத்தில் காவிரியில் சாயத்துணிகள் சுத்தம் செய்த கும்பல்

இரவு நேரத்தில் காவிரியில் சாயத்துணிகள் சுத்தம் செய்த கும்பல்

thanthitv

Namakkal | Cauvery River | இரவு நேரத்தில் காவிரியில் சாயத்துணிகள் சுத்தம் செய்த கும்பல் | ஷாக்கிங் வீடியோ #namakkal #cauveryriver #river #thanthitv இரவு நேரத்தில் காவிரியில் சாயத்துணிகள் சுத்தம் செய்யப்படுவதாகப் புகார் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே, இரவு நேரங்களில் காவிரி ஆற்றில் சாயத்துணிகளைச் சுத்தம் செய்வதால் ஆற்று நீர் மாசடைவதாகப் புகார் எழுந்துள்ளது. குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் செயல்பட்டு வந்த சாயத் தொழிற்சாலைகள், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றியதால் அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டன. இதையடுத்து, காவிரி ஆற்றில் சாயக்கழிவு கலப்பதைத் தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சாயப்பட்டறை உரிமையாளர்கள், இரவு நேரங்களில் பள்ளிபாளையம் அருகே சொக்கராயன்பேட்டை பகுதியில் காவிரி ஆற்றில் அச்சிடப்பட்ட சாயத்துணிகளைக் கழுவுவதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆற்று நீர் மாசடைவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக உரிய ஆதாரங்களுடன் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ள பொதுமக்கள், காவிரி ஆற்றை மாசுபடுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Delhi Protest | டெல்லியில் கூடிய பெரும் கூட்டம் - திரும்பும் திசையெங்கும் தலைகள் | Congress |

TNPSC Group 2 | Chennai | நிறைவடைந்த TNPSC குரூப் 2 தேர்வு - வெடித்த புதிய சர்ச்சை

Murasu Cyclone | Heavy Rain | TN Rains | உருவானது `முரசு' புயல் - ரெடியா இருந்துக்கோங்க மக்களே!!

Rajmohan | TVK | "வாரத்தில் ஒரு நாள் CM விஜய் மாதிரி.." - அமைச்சர் சொல்லும்போதே அதிர்ந்த அரங்கம்

CM Vijay Roadshow | TVK | CM விஜய்க்காக ரெடியான பிளான் - பெரும் திருவிழாவிற்கு தயாராகும் ஸ்பாட்