நமது மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள குமுளியில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள பேருந்து நிலையத்திற்கு மங்கலதேவி கண்ணகி பெயர் சூட்ட கோரியும், கண்ணகி கோயிலுக்கு குடமுழக்கு நடத்த வலியுறுத்தியும், நமது மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கி கண்டன உரை ஆற்றினார். நூற்றுக்கணக்கானோர் ஆர்பாட்டத்தில் பங்கேற்று, கோரிக்கை முழக்கத்தை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.