நாகை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் கிராமத்தை சேர்ந்த 5000 மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிராம நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் மீது தொடர்ந்து பல்வேறு பொய் புகார்களை அளித்து வரும் லட்சுமணன் என்ற மீனவரை கிராமத்தை விட்டு அகற்ற வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.