நாகையில் இந்திய ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முகாம், இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த முகாமை நாகை ஆட்சியர் பிரவீன் நாயர், ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலக இயக்குநர் கர்னல் ரத்தோர் ஆகியோர் துவங்கிவைத்தனர். 8 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில், 15 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். முதல் நாளில் திருச்சி, தஞ்சை, அரியலூர், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு உடல்தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வாகும் இளைஞர்கள், ராணுவத்தில் டெக்னிக்கல், சிப்பாய் பொதுப்பணி உள்ளிட்ட பணியிடங்களில் சேர்ந்து பணியாற்ற உள்ளனர்.