தமிழ்நாடு

"10 நாட்களில் பாஜக மாநிலத் தலைவர் நியமனம்" - பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ்

தமிழக பாஜக தலைவர் 10 நாட்களில் நியமிக்கப்படுவார் என தமிழகத்துக்கான பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியுரிமை திருத்த சட்ட ஆதரித்து நடத்திய பாஜகவின் பேரணி நிர்வாகிகளிடம் உற்சாகத்தை அளித்துள்ளது என்றார். குடியுரிமை திருத்தச் சட்டம், இந்தியாவில் உள்ள எந்த ஒரு மக்களையும் பாதிக்காது என்றும், குறிப்பாக முஸ்லிம் மக்கள் எதற்காகவும் வருந்த தேவை இல்லை ஆனால் இங்கு உள்ள எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், ப.சிதம்பரம் உள்ளிட்டோர், பொய்யான கருத்துகளை பொதுமக்களிடம் தெரிவித்து வருவதாக குற்றம்சாட்டினார். தமிழகத்தில், பாஜக வளர்ந்து வருவதாகவும், உள்ளாட்சி தேர்தலில் அதை நிரூபித்துள்ளதாகவும் முரளிதர ராவ் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்