தமிழ்நாடு

Cuddalore | பிறந்து மூன்றே நாளான பிஞ்சை விற்ற தாய் - கடலூரில் அதிர்ச்சி

பிறந்து மூன்றே நாளான பிஞ்சை விற்ற தாய் - கடலூரில் அதிர்ச்சி

thanthitv

#Cuddalore #NewBornBaby #Illegal #TNPolice #ThanthiTV

Cuddalore | பிறந்து மூன்றே நாளான பிஞ்சை விற்ற தாய் - கடலூரில் அதிர்ச்சி கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தையை விற்பனை செய்ததாக எழுந்த புகாரில், ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். பண்ருட்டியைச் பாத்திமாவுக்கு, கடந்த 19-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குடும்பச் சூழல் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் ஜாபர்கான் மூலம் திருச்சியைச் சேர்ந்த ரேணுகாதேவியிடம் குழந்தையை விற்றதாக கூறப்படுகிறது. இதற்காக 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளனர். பின்னர் பணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், குழந்தையைத் திரும்பக் கேட்ட பாத்திமாவிடம் குழந்தையை ஒப்படைக்க மறுத்ததால், அவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, திருச்சி சென்று குழந்தையை மீட்ட போலீசார், தாயிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் ஜாபர்கானைக் கைது செய்த போலீசார், மேலும் மூவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்

Minister Nirmalkumar | "வேண்டுமென்றே செய்றாங்க.. " - அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு விளக்கம்

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்