சென்னையில் மாநகராட்சி சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு இரவு நேர காப்பங்கள் தொடங்கப்பட்டன. அவை தற்போது வீடற்றவர்களுக்கான காப்பகங்களாக செயல்பட்டு வருகின்றன. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இக்காப்பகங்களில் குடும்பத்தில் இருந்து தனித்து விடப்பட்ட முதியோர்கள், குழந்தைகள், மனநிலை பாதிக்கப்பட்டோர் உள்ளிட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி
ஆணையர் கார்த்திகேயன் உத்தரவுப்படி, தங்க வசதியின்றி மெரினா கடற்கரையில் குளிரில் நடுங்கியபடி படுத்திருந்த 50க்கும் மேற்பட்டோரை மாநகராட்சி ஊழியர்கள் மீட்டு வீடற்றவர்களுக்கான காப்பகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.