Thiruvallur | Teaser-ஐ காட்டிய பருவமழை.. குளம் போல் மாறிய நெடுஞ்சாலை
#tnrains #thiruvallur #heavyrain #highways #rainalert #thanthitv
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, செங்குன்றம், மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதால், தேங்கிய நீரை உடனடியாக வெளியேற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.