புதுக்கோட்டை அருகே இரண்டு ரூபாய் காசை முழுங்கிய சிறுவனுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கினார்.சீகம்பட்டி சேர்ந்த கோபி என்ற சிறுவன் இரண்டு ரூபாய் நாணயத்தை தவறுதலாக விழுங்கிவிட்டதால் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டுவந்தனர். அப்போது ஆய்வுக்கு வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிறுவனுக்கு சிகிச்சை அளித்தார்.