சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சர் சரோஜா, மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்து பேசினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய, மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கங்களின் கூட்டியக்க தலைவர் தீபக், அமைச்சரின் வாக்குறுதியை ஏற்று போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக கூறினார்.