தமிழ்நாடு

கடும் கோடை காரணமாக வறண்டு போன வனக்குட்டைகள் : தாகத்தில் தவிக்கும் வன உயிரினங்கள்

கடும் கோடை காரணமாக வனக்குட்டைகள் வறண்டு போய் உள்ளதால் விலங்குகள் தண்ணீர் இன்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், மான், காட்டெருதுகள் என ஆயிரக்கணக்கான வன விலங்கினங்கள் உள்ளன. இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் வனப்பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டுக்குள் வனத்துறையினரால் கட்டப்பட்டுள்ள மழை நீர் தடுப்பணைகள் காய்ந்து கிடக்கின்றன. வனத்தில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு போய் உள்ளதால் விலங்குகள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன. இந்த நிலையில், நீரோடைகள், குளங்கள் வற்ற வெயில் காரணமல்ல எனக்கூறும் இயற்கை நல ஆர்வலர்கள், வன எல்லையோரங்களிலும், கட்டப்பட்டுள்ள கேளிக்கை விடுதிகள், ஆழ்குழாய் கிணறுகளே முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளனர்.இங்கு எவ்வித கட்டுப்பாடுமின்றி நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாவும் அதனை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வீடுத்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி