தமிழ்நாடு

வீல்சேரில் கோயிலுக்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி... வீடியோவால் பரபரப்பு

தந்தி டிவி

வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சாமி சன்னதியில் வீல்சேரில் அமர்ந்து கருவறை அருகே தரிசனம் செய்ய அனுமதி மறுத்ததாக மாற்றுத் திறனாளி ஒருவர் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், ஆகம விதிகளின்படி வீல்சேரில் சுவாமி நேர்எதிரே அமர்ந்து தரிசிக்க அனுமதியில்லை என கோயில்நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. மாற்றுத்திறனாளியான ரமேஷ்நாராயணன்

அனைத்து சந்நிதிகளிலும் வீல்சேருடன் தரிசனம் செய்த நிலையில் மூலவரான வைத்தியநாத சுவாமி சன்னதியில் கருவறையின் முன்பாக வீல்சேருடன் அனுமதிக்கவில்லை என வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆகம விதிகளின்படி கருவறையின் முன்பு உள்ள பகுதியில் தரையில் அமர்ந்து மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்