தமிழ்நாடு

மாற்றி செலுத்தப்பட்ட 63 ஆயிரத்து 500 கல்வி உதவி தொகை.. மயிலாடுதுறையில் பரபரப்பு

தந்தி டிவி

சோத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த பட்டியலின சமூக மாணவி ராக சுதா... பெரம்பலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். ராக சுதாவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ரோஷினி என்ற மாணவியும் கொற்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாக படித்துள்ளனர். இவர்கள் இருவரும் இந்தியன் வங்கி மயிலாடுதுறை கிளையில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளனர். இந்நிலையில், ராக சுதாவுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்ட 63 ஆயிரத்து 500 ரூபாய் தவறுதலாக ரோஷினியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த பணத்தை ரோஷினியின் பெற்றோர் தர மறுத்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கல்வி உதவித்தொகையை பெற்றுத் தர வேண்டும் என்றும் ராக சுதாவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு