தமிழ்நாடு

தருமபுர ஆதீன விவகாரம்.. பாஜக மாவட்ட தலைவர் கைது.. மும்பையில் சிக்கிய முக்கிய புள்ளிகள்

தந்தி டிவி

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனகர்த்தர் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் ஆபாச வீடியோ இருப்பதாக கூறி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார், 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வழக்கில் தொடர்புடைய மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட 5 பேரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், பாஜக மாவட்ட தலைவர் அகோரம் முப்பையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான தனிப்படை போலீசார், மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம், அலிபாக் நகரில் உள்ள நாகோன் பீச்சில் அகோரத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரை அலிபாக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மயிலாடுதுறைக்கு அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

BREAKING || ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை - மனிஷாவுக்கு CM விஜய் பாராட்டு

Breaking | CM Vijay | NE Monsoon | தமிழகத்தை சூழும் மேகங்கள்.. | ஸ்பாட்டில் CM விஜய் அதிரடி உத்தரவு

Breaking | TN Rains | Rain Alert | "இடி மின்னல் தாக்கும் அபாயம்" | எந்தெந்த மாவட்டங்களுக்கு ஹைஅலர்ட்

Breaking | Tiger Shroff | டைகர் ஷெராப்-ஐ சுடும் முன் வெளியான பரபரப்பு தகவல்

TN Rains | Education Department | பருவமழை எதிரொலி - தமிழகம் முழுவதும்... கல்வித்துறை அதிரடி உத்தரவு