தமிழ்நாடு

மாட்டுத்தாவணி பூ சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்தது

மதுரை, மாட்டுத்தாவணி பூ சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் பூ சந்தையில் இரண்டாவது நாளாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

தந்தி டிவி
மதுரை, மாட்டுத்தாவணி பூ சந்தையில் இரண்டாவது நாளாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த பூ சந்தைக்கு திண்டுக்கல், நிலக்கோட்டை, ஓசூர் ஆகிய இடங்களில் இருந்தும், மதுரை சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில், தொடர் மழை காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் 800 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லி பூ, தற்போது 3 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. கனகாம்பரம் விலை 3 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. தொடர் முகூர்த்த தினம் மற்றும் ஐயப்ப சீசன் ஆகியவற்றால் பூக்கள் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் கூறியுள்ளனர்.

TN Weather Update| சென்னை உட்பட 11 பகுதிகளுக்கு வந்தது திடீர் எச்சரிக்கை

திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம் - ஆதரவாகவும் எதிராகவும் ஒரே இடத்தில் திரள்வதால் உச்சகட்ட பரபரப்பு

Thiruparankudram | மிக மிக முக்கிய புள்ளிகள் மட்டுமே CM உடன்.. நொடிக்கு நொடி பரபரப்பு

DVAC | ``இன்னைக்கு நேத்து இல்ல.. 3 வருஷமா நடக்குது’’ - தமிழகத்திற்கே ஷாக்..

CM Vijay| தீபத்தூண் விவகாரம்.. உச்ச நீதிமன்றம் சென்ற அரசுக்கு எதிர்பாரா சிக்கல்