தமிழ்நாடு

சுங்க கட்டணம் செலுத்த மறுத்த முன்னாள் எம்.எல்.ஏ : ஒத்தையடி சாலைக்கு சுங்க கட்டணமா? - மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ கேள்வி

ஒத்தையடி சாலைக்கு சுங்க கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதை நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

கரூர் மாவட்டம் மணவாசி டோல்கேட்டில் கட்டணம் செலுத்தும் வழியாக பாலபாரதியின் கார் சென்றுள்ளது. அப்போது, முன்னாள் எம்எல்ஏவின் கார் என ஓட்டுநர் குறிப்பிட்ட நிலையில், முன்னாள் எம்எல்ஏ-க்கு இலவச அனுமதி கிடையாது, கட்டணம் செலுத்தி விட்டு செல்லுங்கள் என்று ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் பாலபாரதி உடன் வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவகாரம் பற்றி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பாலபாரதி, பேசிக்கொண்டிருந்தபோதே ஒருவர் துப்பாக்கியை எடுத்துவந்து மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார். டோல்கேட்டில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை கரூர் மாவட்ட ஆட்சியர் அப்புறப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு