தமிழ்நாடு

உண்மை என நினைத்தது பொய்யா? மனோ மகன்களுக்கு என்ன நடந்தது? - பகீர் டுவிஸ்ட்..வெளியான புது வீடியோ

தந்தி டிவி

உண்மை என நினைத்தது பொய்யா? மனோ மகன்களுக்கு என்ன நடந்தது? - பகீர் டுவிஸ்ட்..வெளியான புது வீடியோ

பாடகர் மனோவின் மகன்களை போலீசார் தேடி வரும் நிலையில், தன் மகன்கள் குற்றமற்றவர்கள் எனக்கூறி மனோவின் மனைவி வெளியிட்டிருக்கும் சிசிடிவி வீடியோ வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பார்க்கலாம் விரிவாக..

பாடகர் மனோவின் மகன்கள் இருவரும், தன் நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவர்கள் இருவரை, கடந்த 11 ஆம் தேதி மதுபோதையில் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது...

புகாரின் அடிப்படையில் இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், இரண்டு பேரை கைது செய்தனர்... தொடர்ந்து மனோவின் மகன்கள் இருவரையும் தேடி வருகின்றனர்...

இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த மனோவின் மனைவி ஜமிலா, தன் மகன்கள் குற்றமிழைக்கவில்லை எனவும், மாணவர்கள்தான் வீண் தகராறு செய்து, ஆட்களை வரவழைத்து தன் மகன்களை தாக்கியதாகவும் பகிரங்கமாக குற்றம் சுமத்தி இருந்தார்...

இந்நிலையில், இதற்கு ஆதாரமாக... தன் மகன்கள் இருவரையும், 10க்கும் மேற்பட்ட கும்பல் கட்டைகளால் கண்மூடித்தனமாக தாக்கும் சிசிடிவி காட்சியையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்...

தங்கள் தரப்பு நியாயத்துக்கும், குற்றச்சாட்டிற்கும் ஆதாரமாக மனோவின் குடும்பத்தார் வெளியிட்டிருக்கும் இந்த சிசிடிவி, வழக்கில் பெரும் அதிர்வலைகளை எதிர்படுத்தியிருக்கிறது...

இதனிடையே, குற்றமிழைக்காத தன் மகன்கள் இருவரும், போலீசாருக்கு பயந்து மன உளைச்சலில் எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை என அவர்களது தாயின் கதறலும் வழக்கை மேலும் பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.. 

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி