தமிழ்நாடு

மகா விஷ்ணு விவகாரத்தில் புதிய அதிர்ச்சி தகவலால் பெரும் பரபரப்பு

தந்தி டிவி

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்ட பின்னரே மகா விஷ்ணு மாணவிகளிடையே பேச அழைத்து வரப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

சென்னை அசோக் நகர் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் ஆன்மிக சொற்பொழிவு நடத்திய மகா விஷ்ணுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட மகா விஷ்ணுவிடம் பள்ளி நிகழ்ச்சிக்கு அழைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரான காமாட்சி என்பவர் மூலமாக தான் மகாவிஷ்ணு அழைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து காமாட்சியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜே கே பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருவதும், அந்த நிறுவனம் மூலமாகப் பள்ளியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் மாணவிகளிடம் தன்னம்பிக்கை சொற்பொழிவாற்ற மகாவிஷ்ணு அழைக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்டதாகவும் காமாட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மகா விஷ்ணு வங்கிக் கணக்கில் 10 லட்சம் ரூபாய் இருப்பதும் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM

Chennai | TN Police | மாடியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்

Heavyrain | Weather Update | கொட்டப்போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை