Madurai || தமிழக வீரரின் கனவுக்கு துணை நிற்கும் விவசாய தந்தை மதுரை கொடிமங்கலத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்து இளைஞர் செல்வபிரபு, சர்வதேச தடகளக் களத்தில் இந்தியாவின் பெருமையாக உருவெடுத்துள்ளார். உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி, காமன்வெல்த் சாதனைகள் என முத்திரை பதித்து வரும் இவர், தற்போது அமெரிக்காவின் கேன்சஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டே தொடர் வெற்றிகளைக் குவித்து வருகிறார்.