தமிழ்நாடு

Madurai Teacher POCSO Arrest | மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை

Madurai Teacher POCSO Arrest | மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை

thanthitv

Madurai Teacher POCSO Arrest | மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை - மாணவிகள் சொல்ல சொல்ல வெளியான பகீர் தகவல்கள் மதுரையில் பிரபல தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த‌தாக ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் விரகனூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஆசிரியர், மாணவிகளுக்கு நேரடியாகவும், போன் மூலமாகவும் பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவிகள் மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணாவிடம் ரகசியமாக புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் மற்றும் ஹாஸ்டல் வார்டன் உள்ளிட்ட 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட‌து. ஆசிரியர் ராஜ்குமார் மீது பள்ளி முதல்வரிடம் ஏற்கனவே மாணவிகள் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விட்டதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமாரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

South CMs Meeting | Amit Shah | கூடும் தென்னிந்திய முதல்வர்கள் - `இது லிஸ்ட்லயே இல்லையே..'

🔴LIVE : Amitshah | CM Vijay | கிளம்பி வரும் முதல்வர்கள்.. அதிரும் மாமல்லபுரம்

🔴LIVE : தலைவராக அமித்ஷா துணைத்தலைவராக CM விஜய் - பரபரக்கும் தென்மண்டல முதல்வர்கள் மாநாடு

Ulundurpet Vehicle toll Price | உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் செப்.1 முதல்.. வெளியான கட்டண விபரம்

CM Vijay | Amit Shah | சென்னையில் அமித்ஷா.. இறங்கிய தென்னக CMகள்.. கோவளம் விரைவும் CM விஜய்