Ulundurpet Vehicle toll Price | உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் செப்.1 முதல்.. வெளியான கட்டண விபரம்
Ulundurpet Toll Gate | Vehicle toll Price | உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் செப்.1 முதல்.. வெளியான கட்டண விபரம்
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வருகின்ற செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர்வு - ரூ.5 முதல் ரூ.20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் வரும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. ஒரே நாளில் கார், ஜீப் போன்ற வாகனங்கள் பலமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.105-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இலகுரக வணிக வாகனங்களுக்கு ஒரு முறை பயண கட்டணம் ரூ.120-லிருந்து ரூ.125-ஆகவும், பலமுறை பயண கட்டணம் ரூ.180-லிருந்து ரூ.185-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. லாரி, பேருந்துகளுக்கு ஒருமுறை பயண கட்டணம் ரூ.10 உயர்வு.. பலமுறை பயணிக்கும் லாரி, பேருந்துகளுக்கு ரூ.15 கட்டணம் உயர்வு.. மல்டி ஆக்சில்((Multi Axle) வாகனங்களுக்கு ரூ.20 வரை கட்டணம் உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரும் செப்டம்பர் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது.
