மதுரை மாவட்டத்தில் சிதிலமடைந்து காணப்படும் 336 பள்ளி மற்றும் அங்கன்வாடிக் கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையினர் மேற்கொண்ட ஆய்வில், 336 கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பது தெரியவந்தது. அவற்றை ஆய்வு செய்த மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் , சிதிலமடைந்து காணப்படும் 336 கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தவும் , தேவைப்படும் பள்ளிகளில் புதிய கழிப்பறைகள் கட்டுவதற்கும் உத்தவிட்டுள்ளார்.