தமிழ்நாடு

காதலியின் கணவனை குத்திக் கொலை செய்த கள்ளக்காதலன் - கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்

மதுரை அருகே காதலியின் கணவனை கள்ளக்காதலன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டனுக்கும் மதுரை திருமங்கலத்தை சேர்ந்த ஜோதிலட்சுமிக்கும் திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஜோதி லட்சுமியின் தந்தைக்கு விபத்து ஏற்பட்டதால் உதவிக்காக தன் தாய் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அப்போது அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உதவுவதாக கூறி அதே ஊரை சேர்ந்த கார்த்திக் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

இவர்களின் பழக்கம் நாளடைவில் அடுத்த கட்டத்தை தாண்டியது. ஜோதிலட்சுமியும், கார்த்திக்கும் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். தந்தைக்கு குணமானதும் மீண்டும் தன் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார் ஜோதிலட்சுமி. இங்கு வந்த பிறகும் கார்த்திக் உடன் செல்போனில் பேசி வந்ததால் மணிகண்டனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை தன் மனைவியிடம் கேட்கவே இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்ட ஜோதிலட்சுமி தன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த சூழலில் கார்த்திக் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஜோதிலட்சுமியின் கணவர் மணிகண்டனை டூவீலரில் அழைத்துச் சென்ற நிலையில் அவரை அதன்பிறகு காணவில்லை.

தன் மகன் காணாமல் போனதாக மணிகண்டனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அடுத்த நாள் மணிகண்டன் சடலமாக மீட்கப்பட்டார். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஜோதிலட்சுமியை விரும்பிய கார்த்திக், அவரை தனக்கு திருமணம் செய்து தருமாறு அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே திருமணமான பெண்ணை எப்படி மீண்டும் மணமுடிப்பது என கூறி அவரை கண்டித்துள்ளனர். தன் காதலுக்கு இடையூறாக இருக்கும் மணிகண்டனை கொன்றால் தான் நினைத்தது நடக்கும் என திட்டமிட்ட கார்த்திக் அவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளார்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான கார்த்திக்கை தேடி வருகின்றனர். மேலும் மணிகண்டன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவியின் குடும்பத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு