தமிழ்நாடு

தனியார் நட்சத்திர ஹோட்டலில் எரிவாயு கசிவு : எரிவாயு கசிவை சரிசெய்த தீயணைப்புத்துறையினர்

மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இருந்த எரிவாயு இணைப்பு குழாய்களில் திடீரென கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தந்தி டிவி

மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இருந்த எரிவாயு இணைப்பு குழாய்களில் திடீரென கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் 2 மணி நேரம் போராடி எரிவாயு கசிவை சரி செய்தனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக ஹோட்டலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். இருந்தபோதிலும் வாடிக்கையாளர்களிடம் எரிவாயு கசிவு குறித்த தகவலை ஹோட்டல் நிர்வாகம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்