அவசர, அவசரமாக பொது நல வழக்கு தொடரக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. மதுரை மகபூப்பாளையத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் வெற்றிச்செல்வன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், போதிய தொழில்நுட்ப பணியாளர் இல்லை என்றும் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு புகார்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவசரப்பட்டு பொதுநல வழக்கு தொடரக்கூடாது என்று அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.