தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழகம் வளர்ந்து வருவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் உலக கார்ப்பரேட் நிறுவனங்களின் மேலான் இயக்குனர்களின் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து, மிகப்பெரும் நிறுவனங்கள் எல்லாம் விரைவில் தமிழகத்தில் தொழில் தொடங்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்த அமைச்சர், தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளே இதற்கு காரணம் என்றும் தெரிவித்தார்.